கம்பம் நகராட்சி சார்பில் தெருக்கூத்து தூய்மை விழிப்புணர்வு

கம்பம் : தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா இயக்கத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வருகிற அக்.2ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.ஏற்கனவே 3 கட்டமாக நம்ம நகராட்சி சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 4ம் கட்டமாக பார்க் ரோட்டில் தெருக்கூத்து நாடகம் மூலம் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சர்புதீன்,விருமாண்டி, சாதிக் அலி, முருகன், விஜயலட்சுமி, அன்புகுமாரி ஜெகன் பிரதாப், சகிதா பானு, அபிராமி, சுமதி, லதா ராதாகிருஷ்ணன், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், பால்பாண்டி, நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது : திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு

சிவாஜி கணேசன் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர்