வங்கக்கடல் புயல் எச்சரிக்கை; 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை: பழவேற்காட்டில் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் களமிறங்கிய மீனவர்கள்

திருவள்ளூர்: புயல் எச்சரிக்கை காரணமாக பழவேற்காட்டில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்க கூடிய சூழலில் நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று 4ம் தேதி சென்னைக்கும், ஆந்திராவின் மச்சுளிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம், வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி இருந்த சுழலில் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் மீனவர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில் பழவேற்காட்டில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கும் பணிகளிலும், மீன்பிடிக்கும் வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாக்கும் பணிகளிலும், பராமரிப்பு பணிகளிலும் பழவேற்காடு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை. புயல் கரையை கடந்த பிறகு மீன்வளத்துறை மீனவர்களுக்கு கடலுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பை வெளியிடும்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு