சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

ஆந்திரா: ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இன்று அதிகாலை போலீசார் அவரை கைது செய்தனர்.

சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி, சித்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

Related posts

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்