நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 21 பைக்குகள் திருடிய இருவர் கைது

*ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13 பைக் பறிமுதல்

நெல்லை : செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கருங்குளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் 2 பைக்குகள் திருடு போனது. இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு எஸ்ஐக்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன், தலைமைக் காவலர்கள் வேம்பு, ஆனந்தராஜ், முதல்நிலை காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் கருங்குளம் அடுத்த தாதன்குளம் ரயில்வே கேட் அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.இதில் அவர்கள் வெள்ளூர் கீழத்தெரு சுடலைக்கண்ணு மகன் ராமசுப்பு, இலுப்பைகுளம் அம்மன் கோயில் தெரு சுடலைக்கண்ணு மகன் ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதும், தூத்துக்குடி, நெல்லை, நெல்லை மாநகரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 பைக்குகளை திருடி விற்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13 பைக்குகளை போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!