பங்குச்சந்தைகள் சரிவு

நேற்று காலை பட்ஜெட் உரை துவங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 80,724 புள்ளிகளில் துவங்கியது. சிறிது நேரத்திலேயே 79,224புள்ளிகளாக அதாவது 1,500 புள்ளிகள் சரிந்தது. நீண்ட ஆதாய வரி விதிப்பு உள்ளிட்ட சில பட்ஜெட் அறிவிப்புகளால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து, லாப நோக்கத்துடன் பங்குகளை விற்றனர்.

ஆனால், மதியம் 1 மணிக்கு மேல் சற்று ஏற்றம் காண துவங்கியது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 73 புள்ளிகள் சரிந்து, 80,429 ஆக இருந்தது. நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 24,479 ஆக முடிவடைந்தது. வர்த்தக இடையில், பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதால் வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட டாப் 10 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.9,148 கோடி சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!