ஒன்றிய அரசு துறைகளில் 2006 ஸ்டெனோகிராபர்கள்

ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு: Stenographer Grade ‘C’ and ‘D’ Exam- 2024.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதோடு இந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 முதல் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.8.2024 தேதியின்படி ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் ‘டி’ பணிக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

ஸ்டாப் செலக்சனால் நடத்தப்படும் ஸ்டெனோகிராபர் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். அக்டோபர்- நவம்பரில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 75 செ.மீ., இருக்க வேண்டும். மேலும் 5 செ.மீ., சுருங்கி, விரியும் தன்மை இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.08.2024.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு