திருட்டுத்தனமாக மண் அள்ளி சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து மண் கொட்டியதில் 2 பேர் சாவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் கமலேசன் மகன் சுதாகர் (25). இவர் நேற்று அதிகாலை எருமாம்பட்டி செல்லும் சாலையில் இருந்து டிராக்டரில் மண் எடுத்துக்கொண்டு சந்திரநல்லூரை நோக்கி சென்றுள்ளார். அவருடன் உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (23) சென்றார். சந்திரநல்லூர் அருகே டிராக்டர் சென்ற போது, சாலையோர பள்ளத்தில் சக்கரம் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரில் இருந்த சுதாகர், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மண் கொட்டியதில் இருவரும் மண்ணுக்குள் புதைந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுபற்றி தொப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், எருமாம்பட்டி செல்லும் சாலையில் ஆயில் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மண்ணை திருட்டுத்தனமாக டிராக்டரில் அள்ளி எடுத்துச்சென்ற போது, விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்