புள்ளி விவரம் இல்லாததால் மக்கள் பாதிப்பு சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் 2021ல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கோரிக்கையை அடைவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டுமென்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பாஜவை காப்பாற்றுகிற முயற்சியாகும். எனவே, ஒன்றிய பாஜ அரசு 2021ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மோடி அரசை வலியுறுத்த விரும்புகிறேன்.

Related posts

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

வக்பு வாரிய தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நவாஸ்கனி எம்பி வாழ்த்து பெற்றார்