4 மாநிலங்களில் 19 இடங்களில் என்ஐஏ ரெய்டில் ஐஎஸ்ஐஎஸ் ஏஜென்டுகள் 8 பேர் சிக்கினர்

புதுடெல்லி: கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐஎஸ்சை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)அதிகாரிகள் கர்நாடக மாநிலம், பெங்களூரு, பெல்லாரி, மகாராஷ்டிராவில் மும்பை,புனே,ஜார்கண்டில் ராஞ்சி,பொகாரோ, டெல்லி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். 9 இடங்களில் நடந்த சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் ஏஜென்டுகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெடிகுண்டை தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன பொருட்கள்,கூர்மையான ஆயுதங்கள், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம், செல் போன்கள்,டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வெடிபொருட்களளை பயன்படுத்தி பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயங்கர தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என என்ஐஏ தெரிவித்துள்ளது.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்