மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை : மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்; அதையே பாஜக செய்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்ற போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆச்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டியவர்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்துள்ளது ஒன்றிய பாஜக. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, பிரதமர் ஆனதும் மாநிலங்களின் உரிமையை பறித்துவிட்டார். மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையை பறித்தார். ஒன்றிய பாஜக அரசின் மோசமான அரசியல் சூழ்நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லி வந்தும் போராட்டம் நடத்தியுள்ளார். இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ‘நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்; மாநிலங்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பாஜக மாநில முதல்வர்களுக்கு அதேநிலையே ஏற்படும். கூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காப்பதற்காக INDIA கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தனர்; பிரதமர் மோடி அவ்வாறு மதிப்பதில்லை. பிரதமர் மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல் நடத்துகிறார். மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை. இதற்கு காரணமான மத்திய பாஜக அரசு, மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து பாசிச பாஜகவை வெளியேற்றுவோம்,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!