ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 1497 சிறப்பு அதிகாரிகள்

1. Deputy Manager (Systems)- Project Management & Delivery: 187 இடங்கள். (பொது-76, பொருளாதார பிற்பட்டோர்-18, ஒபிசி-48, எஸ்சி-31, எஸ்டி-14) இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2. Deputy Manager (Systems)- Infra Support & Cloud Operations: 412 இடங்கள் (பொது- 167, பொருளாதார பிற்பட்டோர்-41, ஒபிசி-106, எஸ்சி-68, எஸ்டி-30). இவற்றில் 17 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3. Deputy Manager (Systems)- Net Working Operations: 80 இடங்கள் (பொது-33, ஒபிசி-20, எஸ்சி-13, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-8). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
4. Deputy Manager (Systems)- IT Architect: 27 இடங்கள் (பொது-13, ஒபிசி-6, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5. Deputy Manager (Systems)- Information Security: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1). ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. Assistant Manager (System): 784 இடங்கள் (பொது-320, ஒபிசி-211, எஸ்சி-117, எஸ்டி-58, பொருளாதார பிற்பட்டோர்-78). இவற்றில் 32 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வயது: Assistant Manager பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும். Deputy Manager பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: Assistant Manager பணிக்கு ரூ.48,480- 85,920. Deputy Manager பணிக்கு ரூ.64,820- 93,960.

தகுதி: Computer Science/ Computer Engineering/IT/Electronics/Communication/Software Engineering/Software Technology/Computer Application ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவு அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்.,/எம்எஸ்சி போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் Deputy Manager பணிக்கு 4 ஆண்டுகளும், Assistant Manager பணிக்கு 2 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது, ஒபிசியினர் மற்றும் பொருளாதார பிற்பட்டோர் ரூ.750/-. இதை ஸ்டேட் வங்கி ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.10.2024.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!