ஸ்டாட்டர்ஸ்… கேக்… டெசர்ட்ஸ்…

இந்த கஃபேவில் எல்லாமே ஸ்பெஷல்!

உணவுத் தொழிலைப் பொருத்தவரை அனுபவம் என்பது மிகவும் முக்கியம். உணவு தயாரிப்பதில் தொடங்கி தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்பது வரை அனைத்திலுமே குறைந்தபட்ச பயிற்சி இருந்தால்தான் உணவுத்தொழிலில் சாதிக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் செஃப்பே இல்லையென்றாலும் உணவகம் நடத்துபவர்கள் செஃப் ஆக மாறி அனைத்து உணவுகளையும் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் உணவு தயாரிப்பையும் நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நல்ல உதாரணம் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் இருக்கிற ‘லி ட்ரஃபிள்ஸ்’ கஃபே. இந்த கஃபேவை நடத்துபவரே செஃப்பாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பேக்கிங் கிளாஸ்சும் எடுத்து வருகிறார். இந்திய டெசர்ட்ஸ் மட்டுமல்லாமல் பலவகையான வெளிநாட்டு டெசர்ட்ஸ்சும் கொடுத்து வரும் இந்த கஃபேக்கு கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கிறார்கள். வெரைட்டியான ஃபுட்ஸ்,
கலர்ஃபுல்லான கேக்குகள் என நண்பர்களோடு அரட்டை அடித்தபடி சேர்ந்து சாப்பிடுவதற்கு சிறந்த இடமாக இருப்பதால் அவர்களுக்கு இது நல்ல ஸ்பாட்டாக இருக்கிறது. இந்த கஃபேவின் உரிமையாளர் யுவஸ்ரீயிடம் பேசினோம். “நாம எல்லோருமே டெசர்ட்ஸ் லவ்வர்ஸ்தான். நமக்குத் தெரிந்த டெசர்ட்ஸ விட ஈசியா செய்யக்கூடிய, கூடுதல் சுவை கொண்ட பலவகையான டெசர்ட்ஸ் உலகம் முழுவதும் இருக்கு.

அப்படி ஸ்பெஷலான டெசர்ட்ஸ் கிடைக்கும் ஸ்பாட்டாக இருப்பதுதான் என்னோட லி ட்ரஃபிள்ஸ். எஸ்ஆர்எம் காலேஜ்ல முதலாமாண்டு பிபிஏ படிச்சிட்டு இருக்குறப்ப கொரோனா ஸ்டார்ட் ஆச்சு. அவ்வளவுதான் எல்லாரையும் போல நானும் வீட்டுலயே இருக்க வேண்டிய சூழல். வீட்டில் சும்மா இருப்பது பிடிக்காம எனக்குத் தெரிந்த குக்கிங் ஸ்டைல்ல விதவிதமா கேக் செய்ய ஆரம்பிச்சேன். வீட்டில இருக்கிறவங்க எல்லோருக்கும் சாப்பிடச் சொல்லிக் குடுத்தேன். நான் செஞ்ச கேக் நல்லா இருக்கவே அத முறையாகத்துக்கலாம்னு கொரோனா டைம்ல ஆன்லைன்ல மூனு நாள் கோர்ஸா கேக் மேக்கிங் கத்துக்கிட்டேன். இதுதான் எனது பேக்கிங் பிஸ்னஸுக்கு அடித்தளம்.இந்த மூனு நாள் கோர்ஸ்க்கு எனக்கு பத்தாயிரம் வரை செலவாச்சு. ஓகே, இதே கோர்ஸ நம்மள மாதிரி பேக்கிங் மேல ஆர்வம் இருக்கிறவங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லிக் கொடுக்கலாம்னு யோசிச்சு சோசியல் மீடியா மூலமா மூனு நாள் கோர்ஸ் டீட்டயல் பத்தி பதிவு போட்டேன். அதன் மூலமா என்னைத் தொடர்பு கொண்டு நிறைய பேர் என்கிட்ட கத்துக் கிட்டாங்க. ஒரு வழியா கொரோனா முடிவுக்கு வந்தபோது எனக்கு காலேஜ் மூன்றாவது வருடம். படிப்பு முடிச்ச பிறகு நமக்குத் தெரிஞ்ச பேக்கிங்க வச்சு ஏதாவது பிஸ்னஸ் செய்யணும்னு ஆசை.

அதனால, பேக்கிங் பத்தி இன்னும் அதிகமா கத்துக்கணும்னு பேக்கிங்லயே ஒரு டிப்ளமோ கோர்ஸ் ஜாய்ன் பண்ணேன். அந்த கோர்ஸ் முடிச்சா இன்டர்நேசனல் சர்டிஃபிகேட் கிடைக்கும். அதுமட்டுமில்லாம, அந்த கோர்ஸ்ல ஃப்ரஞ்ச் டெசர்ட்ஸ் நிறைய கத்துக்கலாம். அந்த மூன்று மாத கோர்ஸ ஐந்து லட்சம் செலவு பண்ணி கத்துக்கிட்டேன். அத கத்துக்கிட்டு முடிச்சதுக்குப் பிறகு வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய பல வகையான டெசர்ட்ஸ் அண்ட் கேக்ஸ் ஈசியா செய்ய முடிஞ்சது. இவ்வளவு செலவு செய்து கத்துக்கிட்ட கோர்ஸ சென்னையில உள்ள ஆட்களுக்கு கத்துக்கொடுக்கலாம்னு நான் ஒரு பேக்கிங் கிளாஸ் ஆரம்பிச்சேன். அவங்களுக்கும் மூனு மாதம் இந்த கோர்ஸ குறைந்த கட்டணத்தில் கத்துக் கொடுக்கிறேன். இப்படி நான் தயாரிக்கிற கேக்ஸ், டெசர்ட்ஸ், ஃப்ரஞ்ச் டிஷ்சஸ்லாம் விற்பனை செய்யலாம்னு முடிவு செய்து எனது பேக்கிங் கிளாஸ் பக்கத்திலயே ஒரு கஃபேயை ஸ்டார்ட் செய்தேன். அதுதான் என்னுடைய லி டிரஃப்ள்ஸ். என்னுடைய கஃபேயில் இரண்டு விதமான டெசர்ட்ஸ் அண்ட் ஃபுட்ஸ் கொடுத்து வருகிறேன். அதில் ஃபிரஞ்சில் கிடைக்கக்கூடிய பல வகையான டெசர்ட்ஸ் மற்றும் இத்தாலியில் கிடைக்கக்கூடிய பாஸ்தா மற்றும் பீட்சா கொடுக்கிறேன்.

இவை இரண்டையுமே முறைப்படி கத்துக்கொண்டு அதன்பின் என்னுடைய கஃபேயில் இருக்கிற செஃப்களுக்கு நானே சொல்லிக் கொடுத்தேன். இப்படித்தான் என்னுடைய கஃபேயில் விதவிதமான ஃபுட்ஸ் கொடுக்கிறேன். டெசர்ட்ஸ் எனப் பார்த்தால் சாக்லேட் சிப் குக்கீ வித் ஐஸ்கிரீம் நம்ம கஃபேயில் ரொம்ப ஸ்பெஷல். ஏனெனில் சாக்லேட் மூலமா செய்த குக்கீஸ் மேல ஐஸ்கிரீம் வச்சு பாக்குறதுக்கும் சாப்பிடுவதற்கும் ரொம்ப புதுசா இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. அதேபோல, ப்ரவ்னி வித் ஐஸ்கிரீம். இது பரவலாக பல இடங்களில் கிடைக்கக்கூடிய டிஷ் ஆக இருந்தாலும் இதில இருக்கக்கூடிய ஸ்பெஷல் என்னன்னா இந்த ப்ரவ்னிய நாங்களே தயாரிப்பதுதான். அதன்பிறகு பாத்தோம்னா, ஓரியோ குக்கீஸ்ல டெசர்ட்ஸ், பிஸ்காஃப் சன்டே கிடைக்கும். அப்பறம், பக்லவாவும் கிடைக்கும். அரபு நாடுகளில் கிடைக்கக்கூடிய ஸ்பெஷல் டெசர்ட்ன்னு பாத்தா அது பக்லவாதான். அந்த பக்லவா கூட ஐஸ்கிரீம் வச்சு சாப்பிட்டா சுவை அள்ளும். அதையும் நம்ம கஃபேயில் கொடுத்து வருகிறேன். அப்பறம் ட்ரெண்டிங் டெசர்ட்டாக இருக்கிற காட்டன் கேண்டி ஐஸ்கிரீம் அண்ட் ஹாட் சாக்லேட் ஐஸ்கிரீம் என அனைத்துமே கிடைக்கிறது.

ஃபுட் மெனு எனப் பார்த்தால் பீட்சா, பர்கர், பாஸ்தா இருக்கு. இவை அனைத்திலுமே பல வகையான வெரைட்டிகள் இருக்கு. பீட்சாவில் கார்ன், பெப்பர்ஸ், டொமோட்டோஸ், ஆனியன், ரெட் சில்லீஸ், மஸ்ரூம் என பல வகையான வெஜ் பீட்சாவும் சிக்கன், சிக்கன் பெப்பரோனி என நான்வெஜ் பீட்சாவும் கிடைக்குது. பர்கரிலும் வெஜ் அண்ட் நான்வெஜ் இருக்கு. சிக்கன், பனீர், மஸ்ரூம், கார்ன் என பல வெரைட்டிகளில் பாஸ்தாஸ் இருக்கு. இதுபோக, மொஜிட்டோஸ், மில்க்சேக்ஸ், ஹாட் டிரிங்ஸ் இருக்கு. ஐஸ் டீ, ப்ளூ லடி, காட்டன் கேண்டி என பல ஃப்ளேவரில் மொஜிட்டோஸ் இருக்கு. எனது கஃபேயில் பல வகையான ஸ்டார்ட்டர்ஸ் இருக்கிறது. அதுவும் எங்களுடைய ஸ்பெஷல் வெஜ் அண்ட் நான்வெஜ்ஜில் இருக்கு. சிக்கன் பைட்ஸ், சிக்கன் சீஸ் பாக்கெட், சிக்கன் ஸ்ட்ரிப்ஸ், லோடட் ஃப்ரைஸ், ஸ்வீட் அண்ட் சில்லி ஸ்னாக்கர், சில்லி கார்லிக் ஸ்னாக்கர் என பல வெரைட்டியில் ஸ்டார்ட்டர்ஸ் இருக்கு. இங்கு கிடைக்கும் அனைத்தும் எந்தளவு சுவையானதோ அதே அளவு ஆரோக்கியமானதும் கூட. சாப்பிட்டுப் பார்த்தால் நீங்களும் ரெகுலர் கஸ்டமர்ஸா ஆகிடுவீங்க ‘’ எனக் கூறியபடியே சிரிக்கிறார் யுவ.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

 

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!