ஸ்டான்லி மருத்துவமனையில் கணினி பழுது; ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி

திருவொற்றியூர்: வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்படி நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அட்டை கணினி மூலம் பதிவு செய்து வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாக கணினி சரிவர வேலை செய்யாததால் ஓபி அட்டை பெறுவதில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதுபோல நேற்று காலையில் சிகிச்சை பெற வந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கணினி பழுது அடைந்ததாக கூறியதால் ஓபி அட்டை பெற முடியாமல் காத்துக் கிடந்தனர்.

நோயாளிகள் வராததால் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தனர். கணினி வேலை செய்யவில்லை என்றாலும் கையில் எழுதி ஓபி சீட்டு வழங்கினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும். கணினி வேலை செய்யவில்லை என்றாலும் கையில் எழுதி ஓபி சீட்டு வழங்கினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும்.

Related posts

சிகிச்சை ஓவர், மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!

அக்.04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி