தனி சின்னத்தில் நின்று திருமாவளவன் அபாரம்: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் போட்டியிட்டார். இதில் அவருக்கு பானை சின்னம் ஒதுக்கவில்லை. தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். பின்னர், தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்ததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடைசியாக அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

மிக குறைந்த நாட்கள் மட்டுமே இருந்த நிலையிலும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 5,01,851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 3,99,502 வாக்குகள் பெற்றார். சுமார் 1,02,349 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த தேர்தலில் வெறும் 3,200 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!