ஒன்றிய அரசின் துறைகளில் 8326 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்/ஹவில்தார் பணிகளுக்கு ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Multi Tasking Staff (MTS) (Non-Technical): மொத்த இடங்கள் – 4887. சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
2. Havaldar (CBIC & CBN): 3439 இடங்கள். சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 1.8.2024 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
அக்டோபர் அல்லது நவம்பரில் எழுத்துத் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும்.
உடற்தகுதி: (Havaldar) (ஆண்கள்)- குறைந்த பட்சம் 157.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., இருக்க வேண்டும்.
பெண்கள்: (Havaldar) (பெண்கள்)- குறைந்த பட்சம் 152 செ.மீ., உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதிகள்: (Havaldar):
1. ஆண்கள்- 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.
2. பெண்கள்- ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Related posts

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை