Saturday, September 21, 2024
Home » ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 17,727 இடங்கள் : ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 17,727 இடங்கள் : ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு

by Porselvi

தேர்வு: SSC- Combined Graduate Level Exam- 2024.
காலியிடம் ஏற்பட்டுள்ள பணிகள்: Junior Statistical Officer/Inspectors/Sub Inspector/Assistant Section Officer/ Auditor/Accountant/Tax Assistant/ Postal Assistant/Sorting Assistant/UDC/Research Assistant/Executive Assistant/Junior Intelligence Officer.

கல்வித்தகுதி:
1. Junior Statistical Officer: புள்ளியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 32க்குள்.
2. Research Assistant: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது ஒரு வருட ஆராய்ச்சி பணி அனுபவம் அல்லது சட்டம்/ மனித உரிமைகள் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
3. இதர பணிகளுக்கு: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது; 18 முதல் 27க்குள்.வயது வரம்பு: 1.8.2024 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:
1. Assistant Section Officer/Inspector/Sub-Inspector: ரூ.44,900-1,42,400.
2. Research Assistant/Junior Statistical Officer: ரூ.35,400-1,12,400.
3. Auditor/Accountant: ரூ.29,200-92,300.
4. Postal Assistant/UDC/ Tax Assistant/Sorting Assistant: ரூ.25,500-81,100.
ஸ்டாப் செலக்‌சன் கமிஷனால் நடத்தப்படும் 3 கட்ட ஆன்லைன் தேர்வு (SSC-CGL Exam- 2024), கணினி திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

உடற்தகுதி/ உடற்திறன் தகுதி விவரம்: (Inspector/Sub-Inspector (CBIC)ஆண்கள்: குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி யினருக்கு 152.5 செ.மீ). மார்பளவு: 81 செ.மீ., 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 1600 மீட்டர் ஓடும் திறன் மற்றும் 30 நிமிடங்களில் 8 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.பெண்கள்: குறைந்த பட்ச உயரம்: 152 செ.மீ., உடல் எடை 48 கிலோ இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்்ந்த பெண்களுக்கு உடல் எடை 46 கிலோ இருந்தால் போதும். 20 நிமிடங்களில் ஒரு கி.மீ., நடக்கும் திறன், 25 நிமிடங்களில் 3 கி.மீ., சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்Sub Inspector (CBI): பணிக்கான உடற்தகுதி:

ஆண்கள்: உயரம்- 165 செ.மீ. மார்பளவு (விரிவடைந்த நிலையில்) 76 செ.மீ., பெண்கள்: உயரம் 150 செ.மீ., (உயரத்தில் எஸ்டி யினருக்கு 5 செ.மீ.,) தளர்வு அளிக்கப்படும்.
Sub Inspector (NIA): ஆண்கள்- உயரம்: 170 செ.மீ (எஸ்டியினருக்கு 165 செ.மீ.,). மார்பளவு விரிவடைந்த நிலையில் 76 செ.மீ., பெண்கள்: உயரம் 150 செ.மீ., இருக்க வேண்டும்.
Junior Intelligence Officer: (NCB): ஆண்கள் 165 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருகக வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2024.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi