திருவள்ளூர் அருகே குழாய் போட எதிர்ப்பு; கோஷ்டி மோதலில் கத்திக்குத்து: 11 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குழாய் போட எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கத்திக்குத்து விழுந்ததையடுத்து 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வாசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா (33). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த மதன், கார்த்திக், அபிமன்யு, சத்யராஜ், சூர்யா ஆகியோர் குழாய் போடுவதற்காக வந்திருந்தனர். இதைக் கண்ட வனிதா ஏற்கனவே இங்கு போட்ட குழாய் சரியில்லை. எனவே குழாய் போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2 தரப்பினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மதன் தரப்பினர் வனிதாவையும், அவரது கணவர் தேவேந்திரனையும் கையாலும், கல்லாலும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் மற்றும் அவரது உறவினர்களான வெங்கையன், பசுபதி, பாலாஜி, வசந்த், ராசு ஆகியோர் மதன் தரப்பினரை கையால் தாக்கி, பின்னர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கார்த்திக் என்பவர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இது சம்பந்தமாக இருதரப்பைப் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்