எஸ்எஸ்எல்வி- டி3 ராக்கெட் வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து செலுத்திய எஸ்எஸ்எல்வி – டி3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ராக்கெட்டை தயாரிக்க, செயற்கைக்கோள்களை தயாரிக்க, விண்ணில் செலுத்த, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த ஆரம்பம் முதல் பணியாற்றிய, கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றியவர்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள். மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் வெற்றி உலக அளவில் பெரும் பாராட்டை பெறுகிறது. விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து சிறக்க, வளர வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் ஓடைகளில் மண் அகற்றம்

டெல்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு; மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை: அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை