மகனை காப்பாற்ற இறங்கியபோது கல்லணை கல்வாயில் மூழ்கி எஸ்எஸ்ஐ பலி

தஞ்சை: தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்டுவதற்காக மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன் நேற்று காரில் தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை மானோஜிப்பட்டி பாலம் அருகே கல்லணை கால்வாய்க்கு ராஜா சென்றார். கால்வாயில் குளிப்பாட்டும் போது நாய் பள்ளத்துக்கு சென்றதால், அதை காப்பாற்றுவதற்காக ராகுல் சென்றார். இருவரும் தண்ணீரில் சிக்கியதை பார்த்த ராஜாவும் ஆற்றுக்குள் இறங்கி அவர்களை மீட்க முயன்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி ராஜா பரிதாபமாக பலியானார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு