ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பேருந்து டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புத்தூர் அருகே அரசு பேருந்து டிரைவரை தாக்கிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (50). அரசு பேருந்து டிரைவர். இவர், சோமங்கலம் அருகே அமரம்பேடு முதல் சைதாப்பேட்டை வரை இயக்கப்படும் தடம் எண் 88ஆர் என்ற பேருந்தின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று டிரைவர் குமார், பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டையில் இருந்து அமரம்பேடு நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அமரம்பேடு பகுதியில் மது போதையில் தள்ளாடியபடி பேருந்தில் ஏறிய வாலிபர், டிக்கெட் எடுக்காமல் ரகளை செய்துள்ளார்.

அப்போது டிரைவர் குமார், ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் நெடுஞ்சாலையில் காட்டரம்பாக்கம் கூட்டுரோடு அருகே பேருந்தை சாலையோரம் நிறுத்தி, மதுபோதையில் இருந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், மதுபாட்டிலால் குமார் தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதனைகண்ட பயணிகள், பலத்த காயமடைந்த குமாரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற குமார், பின்னர் இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர், மதுபோதையில் பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்காமல் ரகளையில் ஈடுபட்டு, அரசு பேருந்து டிரைவரை பீர்பாட்டிலால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது