தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ஏற்கனவே தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மேலும் 5 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அண்மையில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பி வைத்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துள்ளனர். கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் ஓராண்டில் 18% உயர்ந்த உடல் உறுப்பு தானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு

ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து