ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்: இலங்கை கடற்படையால் கைதான 64 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ம் தேதி மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

கடந்த 28ம் தேதியும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இரண்டு கட்டங்களாக கைது செய்யப்பட்ட 64 மீனவர்களையும், அவர்களது 10 விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தங்கச்சிமடத்தில் நேற்று முதல் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் வாழ்வாதார பிரச்சனையில் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி, 2வது நாளாக இன்றும் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது