இலங்கை சிறையில் இருந்த 17 மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த 14ம் தேதி மீன் பிடிக்க சென்ற 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 3 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி மீனவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த மீனவர்களை, இலங்கை போலீசார் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி, 17 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், படகுகள் மீதான விசாரணை அக்.27ம் தேதி நடைபெறும். அப்போது படகின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல்

விளைநிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் வளர்க்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்