இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வெடித்த மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக நேர்ந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலையில் அதிபரானார். இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அடுத்தாண்டு செப்டம்பருக்குள் அதிபர் தேர்தலை அறிவித்து, நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

இந்நிலையில், யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், “இலங்கையில் அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த 4 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதால், ரணிலினால் 50% வாக்குகளை பெற முடியாது. தெற்கில் இருந்தும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகள் எந்த கட்சிக்கும் கிடைக்காது. தமிழ் கட்சிகளும் தங்களது சார்பில் ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியாது. அதே நேரம், தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவது எளிது. அந்த பொதுவேட்பாளருக்கான தகுதிகள் தன்னிடம் இருப்பதால், அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்து கேட்டு கொண்டால் போட்டியிட தயாராக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

Related posts

பீகார் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!