இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் போட்டி

கொழும்பு: இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே(38) ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி எனப்படும் பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். அதிபர் விக்ரமசிங்கே, பிரதான எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அதிபர் வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்கா ஆகியோர் ஏற்கனவே களத்தில் உள்ளனர். கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து லங்கா மக்கள் முன்னணியை சேர்ந்த 100எம்பிக்கள் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் நமல் அதிபர் வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு