இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்களுக்கு மீண்டும் சிறை

ராமேஸ்வரம்: தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த 9ம் தேதி பாக் ஜலசந்தி கடலில் 25 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த இவர்களை நேற்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி 25 மீனவர்களில் ஒரு படகில் இருந்த 13 மீனவர்களை 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் இவர்களின் விசைப்படகையும் அரசுடைமையாக்கி உத்தரவிட்டார். அப்போது, விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினரை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும் என்றும், அதுவரை மீனவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் மற்றொரு படகில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களின் விசாரணையும் 28ம் தேதி நடைபெறும் என நீதிபதி கூறினார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 25 தமிழக மீனவர்களும் நேற்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு