4 ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கிய இலங்கை: அக். 1 முதல் படிப்படியாக அமல்

கொழும்பு: சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைப்படி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் படிப்படியாக நீக்குவதாக இலங்கை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக அதிபர் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இறக்குமதிக்கு அனுமதிப்பதால் அந்நிய செலாவணி கையிருப்பு சரிய வாய்ப்புள்ளதால், அதன் தாக்கத்தை குறைக்க கூடுதல் சுங்க வரி விதிக்கப்படும் என இலங்கை அரசு கூறி உள்ளது.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் நீதிமன்ற காவலை செப்.27 வரை நீட்டித்து உத்தரவு

மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு..!!

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!