இலங்கைக்கு ஐஎம்எப் இரண்டாம் கட்ட கடன் உதவி

கொழும்பு: கடந்த ஆண்டு இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாகச் சரிந்து அந்த நாடு திவால் நிலைக்குச் சென்றது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து கடன் உதவி மற்றும் பல உதவிகளை அளித்துள்ளது. நிதி நிலையை சீரமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம்(ஐஎம்எப்) இலங்கை கடன் கோரியது. ஐஎம்எப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 4 ஆண்டு கால அடிப்படையில் ரூ.24,175 கோடி வழங்க கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.2,750 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்த்லால் வீரசிங்கே நேற்று கூறுகையில்,‘‘ இரண்டாம் கட்ட கடன் உதவி குறித்து அடுத்த மாதத்துக்குள் ஐஎம்எப் முடிவு செய்யும். இதில்,ரூ.2,750 கோடி கிடைக்கும். அதே போல் ஆசிய வங்கி, உலக வங்கிகளிடமும் உதவியை எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு

பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்; புதுச்சேரி முதல்வருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சியா?

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்