இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையை சேர்ந்த பைபர்படகை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் சுற்றிவளைத்தனர். அதில் இருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரீகன்(45), சிவக்குமார் (25), ஸ்ரீகாந்தன் (45) என தெரிந்தது. படகின் 40 குதிரை திறன்கொண்ட இன்ஜின் பழுதானதால் 4 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்ததாக தெரிவித்தனர். எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். எனினும் அவர்கள் மீனவர்களா? கஞ்சா கடத்த தமிழகம் வந்தார்களா? அல்லது கடற்கொள்ளையர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்

ஆபத்தான நிலையில் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு