இமாச்சலப்பிரதேசத்தில் ஸ்ரீகந்த் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்சல மாநிலத்தில் ஸ்ரீகந்த் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் அருகே நேற்று இரவு சமேஜ் மற்றும் பாகி பாலங்கள் அருகே மேகம் வெடித்ததில் 45 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14வது பட்டாலியன் கமாண்டன்ட் பல்ஜிந்தர் சிங் கூறுகையில்; “மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக NDRF குழுக்கள் இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்திற்கு நன்கு தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படாமல் இருக்க இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொலைதூர இடங்களுக்கு NDRF குழுக்கள் அனுப்பப்பட்டன. நடந்த சமேஜ் மேக வெடிப்பு ஒரு பெரிய பேரழிவு. இன்று காலை வரை நாங்கள் தற்போது 13 சடலங்களை மீட்டுள்ளோம். மேலும் பத்து பேரைக் காணவில்லை” என தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில், மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர் நகரில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் சிர்மூர் மாவட்டத்தில், அதிக மழை பெய்துள்ளது எனவும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 75 சதவீத பகுதிகளில் 30 மிமீ முதல் 50 மிமீ வரை மழை பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா..? போலீசார் விசாரணை

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு