நள்ளிரவில் படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்

ராமேஸ்வரம்: இலங்கை, யாழ்ப்பாணம் கோப்பை கட்டப்பிரை பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(27). பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு தலைமன்னாரில் இருந்து படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு அகதியாக வந்தார். நேற்று அதிகாலை தனுஷ்கோடி துறைமுகப்பகுதிக்கும், கோதண்டராமர் கோயில் பகுதிக்கும் இடையில் அவரை இறக்கி விட்டு சென்றுள்ளனர். மரைன் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே வேலூர் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும், 2015ல் இலங்கை சென்று பெயின்டிங் தொழில் செய்து வந்ததாகவும் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக வந்ததாகவும் பிரதீப் தெரிவித்தார். இவரிடம் மரைன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி