இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும்: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இலங்கையில் தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் முடிவு பெறுவதை ஒட்டி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

 

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு