25 மீனவரை கைது செய்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்காக மேடையில் நீலிக்கண்ணீர்: மோடி மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 20ம் தேதி 484 விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது, 3 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைபிடித்து கைது செய்துள்ளனர்.

இதை தவிர தனுஷ்கோடிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களையும் சேர்த்து 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்துள்ளனர். இலங்கை அரசோடு கடுமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினாலொழிய தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முடியாது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து, படகுகளையும் மீட்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு