இலங்கையில் தமிழக மீனவர்கள் 29 பேருக்கு காவல் நீடிப்பு

ராமேஸ்வரம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜூன் 17ம் தேதி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 30ம் தேதி கடலுக்குச் சென்ற 4 நாட்டுப்படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த 29 மீனவர்களும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை 29ம் தேதி வரை நீடித்து நீதிபதி நளினி சுபாஷ்கரன் உத்தரவிட்டார். இதனால் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

பவானிசாகர் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

ஆகஸ்ட் 22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு