இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்பி ஹர்ஷ்சிங்குக்கு நேற்று அதிகாலை தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை என்ற இடத்தில் மூன்று கார்கள் அடுத்தடுத்து வேகமாக வந்தது. அவற்றை நிறுத்தி சோதனை நடத்தினர். கார்களின் பின்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் இடுவை பகுதியை சேர்ந்த மணிராஜ்(36), புதுக்கோட்டை மணல்மேல்குடியை சேர்ந்த கவுதமன்(36), விழுப்புரம், திருக்கோவிலூர் தெட்சிணாமூர்த்தி(41), சிவமூர்த்தி(38) ஆகியோர் ஒடிசாவில் இருந்து 10 மூட்டைகளில் ₹10 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை வேதாரண்யத்திற்கு கொண்டு வந்து, படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி