இலங்கை கடற்படை அட்டூழியம்; சிறைபிடித்துள்ள 22 ராமேஸ்வரம் மீனவர்கள், 3 விசைப்படகுகளை மீட்க வலியுறுத்தி போராட்டம்: 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள 22 மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகளை உடனடியாக மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிதித்ததாக கூறி 22 மீனவர்களை கைது செய்தனர்.

ஜஸ்டின், ரெய்மண்ட்,ஹெரியன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும் அவர்கள் இலங்கைக்கு கொண்டு சென்றனர். இரண்டுமாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று சில நாட்கள் தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

 

Related posts

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு