இலங்கை கடற்படை அட்டூழியம்: கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இனிஉலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டு படகையும் அதில் 25 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென பாம்பன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். மீனவர்களின் போராட்டத்தால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

 

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு