இலங்கை கடற்படையினர் அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

*ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம் : படகில் இருந்த வலைகளை வெட்டி வீசிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் குறைந்த மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும் மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் மீன்பாடு குறைவாக இருந்தது. மீன்வரத்து குறைந்ததால் எதிர்பார்த்த அளவில் வருவாய் இல்லை என மீனவர்கள் தெரிவித்தனர். மீன்பாடு குறைவால் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருந்ததாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு