கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளதா எனவும் அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் வருமாறு:
* ஒன்றிய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விளைவுகள் என்ன?
* கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் திட்டங்களுக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்ற மாநிலங்களுக்கு ஆண்டு வாரியாக/மாநில வாரியாக வழங்கப்பட்ட தொகையின் விவரங்கள் என்ன?
* தமிழ்நாட்டில் இளைஞர் நலனை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள் மற்றும் இந்தத் திட்டங்கள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்ததா?
* மேற்படி மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்த புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்குவதற்கு அரசாங்கம் ஏதேனும் திட்டங்களை வைத்திருக்கிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
* தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களுடன் ஒன்றிய அரசு தனது திட்டங்களை செயல்படுத்த கலந்தாலோசனை மேற்கொண்டதா என கேள்வி எழுப்பினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்