தலைமைச்செயலக காலனி பகுதியில் ரூ.32 லட்சத்தில் விளையாட்டு திடல் அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்

பெரம்பூர்: சென்னை தலைமை செயலக காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டு பகுதியில் விளையாட்டு திடல் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், 75வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமணியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி தலைமை செயலக காலனி ஏ.கே.சாமி நகர் 1வது தெரு பகுதியில் சிதிலமடைந்து கிடந்த விளையாட்டு திடலை சீரமைத்து, மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கைப்பந்து, கபடி, செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக்குழு தலைவர் சரிதா, 75வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!