திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்


திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் தங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு நேற்று முன்தினம், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிடம் வழங்கினார்.

இந்நிலையில், விளையாட்டு உபகரணங்களை ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் பூமகள்தேவி வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர் ஆகியோர், 50 ஊராட்சிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

இந்த விளையாட்டு உபகரணங்களை 50 ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். அதேபோன்று, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், 50 ஊராட்சி மன்றங்களின் துப்புரவு பணி மேற்கொள்ள தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி