ஆன்மிகம் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது: தமிழிசை கருத்து

கோவை: கோவையில் தெலங்கானா, புதுவை மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இது ஆன்மிக பூமி. சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மிகத்தை பேசாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

சேகர்பாபு ஆன்மிக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் ஆன்மிகம் முக்கியத்துவம் பெறும். போலியாக ஒருவர் என்சிசி முகாம் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளி கல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாலியல் சீண்டல் விவகாரங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்