பசலைக்கீரை முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை 2 கப் (நறுக்கியது)
முட்டை வெள்ளைக்கரு 4
மெஸரெல்லா சீஸ் 3 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகுத் தூள் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பசலைக் கீரையைப் போட்டு நன்கு மென்மை யாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் சீஸை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கிளறி, உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக் கீரை முட்டை பொரியல் ரெடி!

 

Related posts

குதிரைவாலி உப்புமா

வெந்தயக் கீரை பணியாரம்

கேழ்வரகு மிச்சர்