ஸ்பீடோ மீட்டர் – ஓடோமீட்டர்!

நீங்கள் பைக்கில் செல்லும் பயணத் தூரத்தைகக் கணக்கிடுவதற்கு என்ன செய்வீர்கள்? சிலர் வண்டியில் இருக்கும் ஸ்பீடா மீட்டரை வைத்தே கணக்கிடுவார்கள். சிலர் அதைக் கணக்கிடச் சற்றுச் சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவராக நீங்கள் இருந்தால், இத்தகவல் உங்களுக்குத்தான். ஒரு செயலி மூலம் இந்தக் கணக்கீட்டை எளிதாகப் பார்த்துவிடலாம். கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஜிபிஎஸ் ஸ்பீடோ மீட்டர் – ஓடோமீட்டர்’ ( ‘GPS Speedometer – Odometer’ )செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதற்குத் தீர்வு காணமுடியும். செயலியின் உள்ளே சென்றவுடன் ‘GPS’ குறியீட்டை ஆன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு, டிஜிட்டல் மீட்டர் போல் ஒரு திரை தோன்றும். அதன் கீழே ‘Star trip’ என்கிற பட்டனை அழுத்தினால், அந்தச் செயலி நம் பயணத் தூரத்தைக் கணக்கிட ஆரம்பித்துவிடும். பயணம் முடிந்து end trip கொடுக்க முழுமையான பயண தூரம் கிடைக்கும் பட்சத்தில் செலவாகும் நேரம், பயன்படுத்தப்படும் எரிபொருள் உட்பட தெரிந்துவிடும்போது பயணச் செலவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

 

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்