பிரச்சனை என்றால் மக்களுக்கு முன்னின்று பணி செய்யும் கட்சி திமுக: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது ஒன்றிய அரசு என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வே தொன்போஸ்கோ பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; எம்மதமும் எங்களுக்கு சம்மதம்; அனைவரும் சமம் என்ற கொள்கையை பின்பற்றுகிறோம். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது ஒன்றிய அரசு. 2015 – 2021 வரை மத்திய அரசிடம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியில், 4.7 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் கொடுக்க வேண்டிய நிதியை கொடுத்து இருக்கிறார்கள். பேரிடர் பாதிப்புக்காக ரூ.21,700 கோடி இழப்பீடு கேட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசை குற்றஞ்சாட்டி அரசியல் செய்கிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தென்மாவட்டங்களுக்கு எந்த மத்த அமைச்சராவது, பாஜக தேசிய தலைவர்களாவது வந்தனரா? மாறுபட்ட ஆட்சி நடப்பதால் தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசுக்கு மனமில்லை. பிரச்னை என்றால் மக்களுக்கு முன்னின்று பணி செய்யும் கட்சி திமுக இவ்வாறு கூறினார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்