பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் (எண் 06042) இரவு 8.30 மணிக்கு புறப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், மதுரை வழியாக இந்த ரயில் 5ம் தேதி காலை 9.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.

மீண்டும் அதே அதிவிரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 6ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைகிறது. அதேபோல, கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் (எண் 06043) இன்று இரவு 11.30 மணி புறப்படுகிறது. ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இந்த ரயில் 5ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. மீண்டும் அதே அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்புட்டு 8.25 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

 

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்