சிறப்பு பிரிவினருக்கான கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 16ம் தேதி கவுன்சலிங்: மருத்துவ சேர்க்கை குழு அறிவிப்பு

சென்னை: 2023-24ம் ஆண்டு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது என கால்நடை மருத்துவ கேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகள், உணவு, கோழியினம், பால்வளம் போன்ற தொழில்நுட பி.டெக். படிப்புகளில் 760 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கலந்தாய்வு குறித்த விவரத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, வருகிற 16ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பி.டெக். படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 16ம் தேதியும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 17ம் தேதியும், பி.டெக். படிப்புகளுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு 18ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு அனைத்தும் நேரடி முறையில் சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் நடக்க இருக்கிறது. இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பிரிவு மற்றும் தொழில்கல்வி பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்