சிறப்பு அந்தஸ்து ஒரு வரலாறு ஆகி விட்டது ஜம்மு காஷ்மீருக்கு 370வது சட்டப்பிரிவு மீண்டும் வரவே வராது: அமித்ஷா திட்டவட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி பாஜவின் தேர்தல் அறிக்கை நேற்று வௌியிடப்பட்டது. ஜம்மு நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை வௌியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “370வது சட்டப்பிரிவு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும், கற்களையும் கொடுத்தது. இளைஞர்கள் தீவிரவாத பாதையில் செல்ல அந்த சட்டம் வழிவகுத்தது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு தற்போது ஒரு வரலாறு ஆகி விட்டது. அரசியலமைப்பில் அது இல்லை. அது மீண்டும் வரவே வராது” என்று உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, “ ஜம்மு காஷ்மீரில் பாஜ ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் ” என்றார்.

 

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை