நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் அது உடனடியாக அமல்படுத்தப்படுகிறதா என்றால் கேள்வியாக தான் தற்போது வரையில் இருக்கிறது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றி அதனை அமல்படுத்தி தான் வருகின்றன. இந்த மனுவை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்யாதீர்கள் என்று ஏற்கனவே மனுதாரரிடம் கூறியுள்ளோம். மூத்த வக்கீல் ஒருவரிடம் மனுதாரர் சேர்ந்து கொஞ்சம் சட்டம் படிக்க வேண்டும்’’ எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்