நில உரிமையாளரிடம் அசல் ஆவணம் தர ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (67). இவருக்கு சொந்தமான சோளிங்கர் பகுதியில் உள்ள நிலத்தில் 1913 சதுர மீட்டர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனம்- நகரி ரயில் பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை பெறுவதற்காக அனைத்து அசல் ஆவணங்களையும் கோவிந்தராஜ் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி அவருக்கு இழப்பீடாக ரூ6,27,080 வழங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவிந்தராஜ் அசல் ஆவணங்களை திரும்ப பெற சென்றபோது, சிறப்பு வட்டாட்சியர் மதிவாணன், 1 சதவீதம் ரூ6 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பேரம் பேசியதில் ரூ4 ஆயிரம் கொடுக்குமாறு சிறப்பு தாசில்தார் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கோவிந்தராஜ் ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ4 ஆயிரத்தை நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் மதிவாணனிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சிறப்பு தாசில்தார் மதிவாணனை கைது செய்தனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்